Thursday, November 05, 2009

முர‌ண்

யாச‌க‌ம் கேட்ட‌வ‌னை
க‌ட‌ந்து சென்றேன்
கோவிலுக்குள்!!!

Tuesday, July 11, 2006

உணர்கிறேன்!!

உணர்கிறேன்!!

சப்தங்கள் மறையும் இடத்தில்
நிசப்தங்கள்தொடங்கும் புள்ளியில்

இருத்தலின் அடையாளங்களில்
இல்லாதவற்றின் இருத்தல்களில்

முடிவுகள் எனும் மாற்றங்களில்
தொடக்கம் எனும் உருவகங்களில்

ஒளியின் எல்லையில்
இருளின் முடிவில்

துன்பத்தின் இறுதியில்
இன்பத்தின் ஆரம்பத்தில்

எத்தனை கோடி இன்பங்களில்
அத்தனை கோடி துன்பங்களில்

இன்னும் எத்தனையோ உருவகங்களில்
உணர்வுகளில் உணர்ந்ததை உணர்த்த முடியாது-எனும்

உணர்வுகளோடு உணர்கிறேன்...
இறைவனின் இருத்தலை.... உணர்கிறேன்....

Friday, June 30, 2006

இருக்கின்றேன்!!!.....

இருக்கின்றேன்!!!.....

இருப்பதன் அடையாளமாய்...

ஏற்பு வினையாற்றுகிறேன் - இல்லை

எதிர் வினையாற்றுகிறேன்!

இருப்பதன் அடையாளம்?

ஏற்பதா? எதிர்ப்பதா?

இருப்பதன் அடையாளம்

வினையாற்றுவதே....

இருப்பதன் அடையாளம்!

எனவே

இருக்கின்றேன்!!

Thursday, December 29, 2005

ஆடை அவிழ்க்கும்!! நாள் எப்பொழுது?

ஆடை அவிழ்க்கும்!! நாள் எப்பொழுது?
ஆம் அந்த நாள் எப்பொழுது?

கணணி வல்லுநர் எனும் ஆடை!படித்தவன் எனும் ஆடை!பேசத் தெரிந்தவன் எனும் ஆடை!
பணம் சேர்க்க் தெரியும் எனும் ஆடை!
திறமையானவன்?! எனும் ஆடை!
அழகானவன்?! எனும் ஆடை!
எழுதத் தெரியும் எனும் ஆடை!
நல்லவன், கெட்டவன் எனும் ஆடை!

ஜாதி எனும் ஆடை!
மதம் எனும் ஆடை!
மொழி எனும் ஆடை!
இனம் எனும் ஆடை!

நான் ஆண் எனும் ஆடை!
இன்னும் எத்தனை ஆடைகள்.....
ஆடை அவிழ்க்கும்!! நாள் எப்பொழுது?
ஆம் அந்த நாள் எப்பொழுது?

Tuesday, December 27, 2005

எதிரொளிப்பு

"எதிரொளிப்பு" தானா "நான்"


அன்பு செய்தால் அன்பு செய்வதும்
வெறுத்தால் வெறுப்பதும்
கோபம் கொண்டால் கோபிப்பதும்
துன்பத்தில் துவள்வதும்
இன்பத்தில் கூத்தாடுவதும்
எதிர்பாலிடம் காமம் கொள்வதுமாய்....
இன்னும்....
வெறும் "எதிரொளிப்பு" தானா நான்?!!

Thursday, November 17, 2005

"நான்" "நீ" "நாம்"

"நான்" இருந்தால் "நீ" என்ற முன்னிலையும் "அவன்(ள்)" என்ற படர்க்கையும் உண்டு.
"நான்" இல்லையென்றால் "நானே" எல்லாம்.

Tuesday, November 15, 2005

தீ

தீ எனக்குள்

எரிவது எப்பொழுது

"நான்"